அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகும் நேரம்: மக்கள் அவதானம்

notice– ஏ. சுபைர்

காத்தான்குடி: தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. பெரும்பாலான மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்று ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர். ஆனால் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி, தனது ஆதரவுகைள கொஞ்சமாவது அதிகரித்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் பேராசை கொள்வர்.

இதனால், தங்களது “விசுவாசிகளை” ஏவி, துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு, அனாமோதய பெயரில் வெளியிட்டு இலாபம் தேட முனைந்துகொள்வது அவர்களின் வழமையான வாடிக்கையாகும்.

இவ்வாறான அநாமோதயத் துண்டுப்பிரசுரங்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதால், சிறுவர்களைக் கொண்டு விநியோகிப்பது, வீதிகளில் வீசிவிட்டுச் செல்வது போன்ற செயல்கள் இடம்பெறுவது வழமை.

notice

இவ்வளவு ஓர் நவீனமான கால சூழ்நிலையில், இவ்வாறான தேர்தல் விதிகள் யாரால் மீறப்படுகின்றன என்பதை இலகுவாகக் கண்டுகொள்ள முடியும்.

இவ்வாறான துண்டுப்பிரசுர்ஙகளை வெளியிடுவோர்களை தேர்தல் சட்டத்தின்படி கைதுசெய்து சிறைப்படுத்த சட்ட அனுமதி இருக்கின்ற நிலையில், இத்தகைய அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் விடயத்தில் பொதுமக்கள் மிக விளிப்பாக இருப்பதுடன், இதனை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாரும் கேட்கப்படுகின்றனர்.

Published by

Leave a comment