தேசிய அரசாங்கம் குறித்து இறுதி இணக்கப்பாடு

malik samaraweeraகொழும்பு: தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (தேசியப் பட்டியல்) மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். மலிக் சமரவீரவின் கையெழுத்திடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்று இன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கமான ஆட்சிமுறையை உருவாக்க முழு பாராளுமன்றத்தையும் ஒரு அரசாங்கமாக மாற்றவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாளாந்தம் கூறியது.

இதன்பொருட்டு குறைந்தது இரண்டு வருடங்களாவது தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக நாம் கூறினோம். இதன் அடிப்படையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் அண்மையில் உடன்படிக்கை ஒன்றை கையெழுத்திட்டோம்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மிகவும் நட்புடனும் ஆழமானதுமான கலந்துரையாடலை மேற்கொண்டு இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். இதில் இரு தரப்பினரது முக்கிய நோக்கமாகவும் இருந்தது மக்களுக்கு சேவை செய்வதே, என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment