ஐ.எஸ். தீவிரவாதத்தின் உச்சம்: குழந்தை ஒன்று கரடி பொம்மையின் தலையை துண்டிக்கும் காணொளி

isisடமஸ்கஸ்: ஐஎஸ் கொடிக்கு முன்பு நின்று கொண்டு 3 வயது குழந்தை ஒன்று கரடி பொம்மையின் தலையை துண்டிக்கும் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் பலாத்தாரம் செய்கிறார்கள். அவர்களை பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் பாலியல் அடிமை சந்தையில் வேறு விற்பனை செய்கிறார்கள்.6 முதல் 9 வயது வரை உள்ள சிறுமிகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.

ஐஎஸ் தீவரிவாதிகள் சிறுவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து பிணையக் கைதிகளை சுட்டுக் கொல்ல வைத்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. கரடி பொம்மை ஒன்றின் தலையை கத்தியால் வெட்டும் இக்காட்சி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Published by

Leave a comment