அட்டாளைச்சேனைக்கு வழங்கயிருக்கும் தேசியப் பட்டியல் யாருக்கு????

slmc addalaichenai– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத்
 
அட்டாளைச்சேனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் இம்முறை அட்டாளைச்சேனைக்கு வழங்கயிருக்கும் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் நிறைவேற்றப்பட்ட ஏகமான தீர்மான கடிதம் ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு குழுவும் ,

  முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் பொது செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று இன்னுமொரு குழுவும் மிக தீவிரமாக செயற்பட்டுவருகின்றது.

slmc addalaichenai 
இறுதியாக  கிடைத்த தகவலின்படி ஸ்தாபக பொது செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களுக்கு தேசியப்பட்டியலை வழங்க கட்சியின் தலைமை அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் ஏ.எல்.எம்.நஸீருக்கு (மா.ச.உ) கிடைக்காமல் வேறு நபர்களுக்கு வழங்கப்படும் சமயத்தில் கட்சிக்குள் சிறியதளம்பல்  ஏற்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது.
 
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் தினங்களில் முடிவுகள் வெளியாகும்,

Published by

Leave a comment