கொழும்பு: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் ஒரு போதும் எதிர்க்கட்சி தலைமை பதவியை ஏற்றுகொள்ளப் போவதில்லை என் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். தான் எதிர்கட்சி தலைவர் பதவியை ஏற்றுகொள்ள போவதில்லை, எனினும் எதிர்கட்சியில் இருந்து உறுப்பினர் பங்கினை சரியாக நிறைவேற்றுவேன் என மஹிந்த ராஜபாக்ச, ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Published by

Leave a comment