Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொய்ச் சாட்சியம் கூறி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலிடம் விளக்கம்

    –  எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: பாரதூரமான ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பொய்ச் சாட்சியம் கூறி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கான காரணங்கள் இருப்பின் அதனை முன்வைக்குமாறு ரத்னா லங்கா பாதுகாப்பு சேவையின் மேட்டுநிலப் பிரிவின் பொதுமுகாமையாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவிடம் நேற்றைய தினம் (04) விளக்கம் கோரப்பட்டுள்ளது.

  • சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார் ஹரீஸ் எம்.பி

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் 8வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை சிறுபான்மை சமூகத்திற்கு கிடைத்துள்ள மிகக் பெரும் கௌரவமாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  • யெமனில் கொல்லப்பட்ட சிப்பாய்களுக்காக அரபு எமிரேட்ஸில் துக்கதினம்

    சனா: யெமனில் கொல்லப்பட்ட தமது இராணுவ சிப்பாய்கள் 45 பேருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கின்றது. இராணுவ சிப்பாய்களின் சடலங்கள் எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபிக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. யெமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து இந்த சிப்பாய்கள் போரிட்டனர்.

  • ஆயிரக்கணக்கான அகதிகள் ஒஸ்திரியாவை சென்றடைந்துள்ளனர்! உணவும் சூடான பானங்களும் கொடுத்து வரவேற்ற ஒஸ்திரிய மக்கள்!!

    வியன்னா: ஆயிரக்கணக்கான அகதிகள் பெரும்பாலும் சிரியாவின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிவந்துள்ள அகதிகள்- ஹங்கேரியை கடந்து ஒஸ்திரியாவை சென்றடைந்துள்ளனர். அகதிகளின் பயணம் தொடர்பில் இருந்த கட்டுப்பாடுகளை ஹங்கேரி அரசு தளர்த்தியுள்ள நிலையில், அந்நாட்டு பேருந்துகள் அவர்களை எல்லை வரை கொண்டுசென்று விட்டன.

  • ஹிஸ்புல்லாஹ் உட்பட பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள இராஜங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரம்

    கொழும்பு: புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர்கள் 10 பேருக்கும் பிரதி அமைச்சர்கள் 38 பேருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்படவுள்ளது.

  • ஒஸ்திரியாவை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ள அகதிகள்!!

    வியன்னா: புடாபெஸ்ட் ரயில் நிலையத்தில் புறப்படுவதற்கு போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் சுமார் 1,000 அகதிகள் ஒஸ்திரிய எல்லையை நோக்கி நடக்கத் துவங்கியுள்ளனர்.புடாபெஸ்டின் கெலெடி ரயில் நிலையத்தில் பல நாட்களாகக் காத்திருந்தும் போதுமான சர்வதேச ரயில்கள் இல்லாத நிலையில், 180 கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ஒஸ்திரிய எல்லையை அடைய இவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

  • சு. க தரப்பில் இன்னும் நால்வருக்கு முழு அமைச்சர் பதவிகள்: யார் அவர்கள்…?

    கொழும்பு: நேற்று அமைச்சரவை அமைச்சர்கள் 42 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரசிங்க ஏற்கனவே சத்தியப் பிரமாணம் செய்து உள்ள நிலையில் மொத்தமாக இது வரை சத்தியப் பிரமாணம் செய்து உள்ள அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 43.

  • அம்பாறை மாவட்டத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக அமைச்சர் ரிஸாத் தெரிவிப்பு

    – எம்.ரீ.எம். பாாிஸ் கொழும்பு: முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம் பெற்ற பிற்பாடு அம்பாறை மாவட்டத்தில் வாக்கு எண்னப்பட விதங்களில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சா் ரிஸாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு 33122 வாக்குகளை பெற்று தோல்வியடைத்தது.

  • “இலங்கை அமைச்சர்கள் அதிகரிக்க பதவி ஆசையே காரணம்”: மனோ கணேசன்

    கொழும்பு: இலங்கையின் புதிய அமைச்சரவையின் 42 அமைச்சர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களைத் தவிர, வெளியுறவு அமைச்சராக மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன்னரே பதவியேற்றுவிட்டார். புதிய அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி

  • துபாயில் ‘ஸ்கை டைவிங்’ செய்து சாகசம் நிகழ்த்திய டேவிட் மில்லர்! (வீடியோ)

    துபாய்: துபாய் சுற்றுலா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான டேவிட் மில்லர் அங்கு ‘ஸ்கை டைவிங்’ செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தற்போது ஓய்வில் இருக்கும் டேவிட் மில்லர் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு ‘ஸ்கை டைவிங்’ செய்து மிரள வைத்துள்ளார்.

  • ‘அகதிகள் வரவேற்கப்படுகின்றனர்’ – அரசு கைவிட்டாலும் அன்புடன் வரவேற்கும் ஐரோப்பிய மக்கள்!

    – SHM வியன்னா: ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் மக்களை அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர் அந்நாட்டு மக்கள்.போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன.

  • மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான கிணறு அடையாளம் காணப்பட்டுள்ளது

    மட்டக்களப்பு: வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது.

←Previous Page
1 … 334 335 336 337 338 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar