துபாயில் ‘ஸ்கை டைவிங்’ செய்து சாகசம் நிகழ்த்திய டேவிட் மில்லர்! (வீடியோ)

david millerதுபாய்: துபாய் சுற்றுலா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான டேவிட் மில்லர் அங்கு ‘ஸ்கை டைவிங்’ செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தற்போது ஓய்வில் இருக்கும் டேவிட் மில்லர் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு ‘ஸ்கை டைவிங்’ செய்து மிரள வைத்துள்ளார்.

துபாயில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் தீவின் உயரத்தில் இருந்து விமானத்தில் ‘ஸ்கை டைவிங்’ செய்துள்ளார் மில்லர். இந்த முழு வீடியோவை “ஜாலியான காலைப் பொழுது” என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.

david miller

Published by

Leave a comment