யெமனில் கொல்லப்பட்ட சிப்பாய்களுக்காக அரபு எமிரேட்ஸில் துக்கதினம்

yemenசனா: யெமனில் கொல்லப்பட்ட தமது இராணுவ சிப்பாய்கள் 45 பேருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கின்றது. இராணுவ சிப்பாய்களின் சடலங்கள் எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபிக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. யெமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து இந்த சிப்பாய்கள் போரிட்டனர்.

ஆயுதக் கிடங்கு ஒன்றின்மீது ரொக்கெட் குண்டொன்று விழுந்து பரவிய தீயில் சிக்கியே இவர்கள் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறுகின்றது.

yemen

யெமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா-வில் உள்ள இலக்குகள் மீது நேற்றிரவு கூட்டுப்படையினரின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சுக் கட்டடம் மோசமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Published by

Leave a comment