கொழும்பு: முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம் பெற்ற பிற்பாடு அம்பாறை மாவட்டத்தில் வாக்கு எண்னப்பட விதங்களில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சா் ரிஸாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு 33122 வாக்குகளை பெற்று தோல்வியடைத்தது.
மேலதிகமாக 1600 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்குமாயின் அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தை பெற்று பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கும்.
இருப்பினும் அம்பாறை மாவட்டத்தில் வாக்கு எண்னப்பட விதங்களில் தமக்கு சந்தேகம் எழுத்துள்ளதாகவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்காக வேண்டிய மனுதாக்கல் செய்வதற்காக சட்டதரனிகளின் ஆலோசனைகளை பெற்று வருவதாக கைத்தொழில் வர்த்தக வானிப துறை அமைச்சர் ரிஸாத் பதியுதீன் தேசிய தொலைகாட்சியில் (04.09.2015) வெள்ளிக்கிழமை இடம் பெற்ற வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
Published by

Leave a comment