கொழும்பு: நேற்று அமைச்சரவை அமைச்சர்கள் 42 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரசிங்க ஏற்கனவே சத்தியப் பிரமாணம் செய்து உள்ள நிலையில் மொத்தமாக இது வரை சத்தியப் பிரமாணம் செய்து உள்ள அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 43.
48 அமைச்சர்களை நியமிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு உள்ளது. அதே நேரம் இத்தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தரப்பில் 15 அமைச்சர்களை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி இணங்கி இருந்தது.
ஆனால் சுதந்திர கட்சித் தரப்பில் 11 அமைச்சர்களே சத்தியப் பிரமாணம் செய்து உள்ளனர்.
1. போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா
2. சமூக வலு மற்றும் நலத் துறை அமைச்சர் எஸ். பி. திஸநாயக்க
3. தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி. ஆர். செனவிரட்ண
4. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர யாப்பா
5. தொழினுட்பம் மற்றும் தொழினுட்ப கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த
6. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
7. கடல் தொழில் மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர
8. மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின் சக்திகள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய
9. விவசாய அமைச்சர் துமிந்த திஸநாயக்க
10. பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாய் அமைச்சர் சந்திம வீரக்கொடி
11. விளையாட்டுத் துறை அமைச்சர் – தயாசிறி ஜயசேகர
ஆகியோரே சத்தியப் பிரமாணம் செய்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் வரும் நாட்களில் சுதந்திர கட்சி தரப்பில் இன்னும் 04 பேர் சத்தியப் பிரமாணம் செய்வர் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
* டிலான் பெரேரா
* ஏ. எச். எம். பௌசி
* ஆறுமுகன் தொண்டமான்
* ………………….??
ஆகியோரே சத்தியப் பிரமாணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
(மின்னஞ்சல்: தாய்நாடு)
Published by
![parliament[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/08/parliament1.jpg?w=150&h=100)
Leave a comment