பொய்ச் சாட்சியம் கூறி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலிடம் விளக்கம்

gamini jayasundara–  எம்.ஐ. அப்துல் நஸார்

கொழும்பு: பாரதூரமான ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பொய்ச் சாட்சியம் கூறி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கான காரணங்கள் இருப்பின் அதனை முன்வைக்குமாறு ரத்னா லங்கா பாதுகாப்பு சேவையின் மேட்டுநிலப் பிரிவின் பொதுமுகாமையாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவிடம் நேற்றைய தினம் (04) விளக்கம் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது கொண்ட அபரிமிதமான கௌரவம் மற்றும் அன்பு காரணமாக முந்தைய தினம் இந்த ஆணைக்குழுவிற்கு முன்னிலையில் பொய்ச் சாட்சியம் கூறியதாகவும், அவ்வாறு பொய்ச் சாட்சியம் கூறியது தற்குக் காரணம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை காப்பாற்றுவதற்காகவேயாகும் என குறிப்பிட்டு பொய்ச் சாட்சியம் கூறியம் கூறியதை ஏற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவிடமே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

gamini jayasundara
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவிடம்

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் என்ற வகையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்து ஆணைக்குழுவிற்கு பொய் கூறுவது பாரதூரமான குற்றமாகும் எனவும் சாதாரண படைவீரர் அல்லது கீழ் நிலையிலுள்ள ஒருவர் பொய்ச் சாட்சியம் கூறினால் அதனை கருத்திலெடுக்காதிருக்க முடியும் ஆனால் உயர் அதிகரியொருவர் உண்மையினை கூறுவதாகத் தெரிவித்து சத்தியம் செய்த பின்னர் பொய் கூறுவதை சிறயதொரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குழு, தேவையாயின் சட்டத்தரணியொருவரின் உதவியினைப் பெற்றுக்கொண்டோ அல்லது சட்டத்தரணியொருவருடனோ சமூகமளித்து ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவிற்கு அறிவித்துள்ளனர்.

Published by

Leave a comment