விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு கல்முனையில் நாளை வரவேற்பு!
ஹாசிப் யாஸீன்
கல்முனை: இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பிரதி அமைச்சர் பதவியேற்று முதற்தடவையாக தனது கல்முனை மண்ணுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதனையிட்டு வருகை தரும் பிரதி அமைச்சரை வரவேற்கும் ஊர்வல நிகழ்வு நாளை 12.09.2015ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மாளிகைக்காடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே இவ்வரவேற்பு ஊர்வல நிகழ்வில் கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு கல்முனையில் நாளை வரவேற்பு
கல்முனை மண் 15 வருடங்களாக இழந்திருந்த அரசியல் அதிகாரம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் கல்முனை மண்ணும், மக்களும் கட்சியினால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
Leave a comment