-
ரி. லிரோஸ்காந்த்
மட்டக்களப்பு: கல்லடி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஓவியங்கள் சிற்பங்கள் கைவினை மற்றும் புத்தாக்க “வண்ணமும் வடிவும்” என்ற தலைப்பில் கட்புலக்கலைகளின் கண்காட்சி இம்மாதம் 16, 17, 18ம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற உள்ளது.
இக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு அனுமதிச் சீட்டாக,
மாணவர்களுக்கு- ரூ. 20/= வும்
ஏனையோருக்கு- ரூ. 50/= வும் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.பாடசாலை மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டுக்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தகக்கது.


Leave a comment