-
புவி எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ்
காத்தான்குடி: வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர். ஹப்ஸா மஹாஸ் (D.H.M, B.F.M, M.T) அவர்கள், நேற்று (20) காத்தான்குடிக்கு வருகை தந்துள்ளார். காத்தான்குடி கடற்கரை முகப்பு வீதியில் அமைந்துள்ள ‘சலாகா’ பாயிஸ் விருந்தினர் விடுதியில் தங்கியுள்ள டாக்டர் அவர்களிடம் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவிக்கு வைத்திய சிகிச்சை பெற்றுப் பலனடைந்த நமதூர் சகோதரர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கமைய,
அவர் இன்று 21ம் திகதி திங்கட்கிழமையும், மறுநாள் 22ம் திகதி செவ்வாய்க்கிழமையும் இவ்விருந்தினர் தங்கு விடுதியில் தங்கியிருந்து காத்தான்குடி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் நரம்பியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வைத்திய ஆலோசனைகளை வழங்குவதற்கு இணங்கியுள்ளார்.
நரம்புகளின் பாதிப்பினால் ஏற்படும் வலிப்பு, முதுகு முள்ளின் சில்லு விலகல், திமிர்ப்பு, ஒற்றைத் தலைவலி, மூட்டுக்களில் ஏற்படும் வலி உட்பட நரம்பு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த இரு தினங்களிலும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சைக்கான வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
0777773893
0772512816
0715912080

Leave a comment