மக்கா: இவ்வருடம் இடம்பெறும் ஹஜ் கடமையின் பாதுகாப்புக்காக ஒரு இலட்சம் இராணுவத்தை சவுதி அரேபியா களமிறக்கியுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை பேச்சாளர் மாஜி. ஜென. அல் துர்கி தெரிவித்துள்ளார். ஹஜ் வணக்கம் எந்த தடையுமின்றி பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இடம்பெறும் நோக்கிலேயே வழமையை விடவும் இம்முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக அல் துர்கி தெரிவிக்கிறார்.
உலகெங்கிலுமிருந்து 3 மில்லியன் மக்கள் இம்முறை ஹஜ் யாத்திரிகைக்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், அனைத்து மக்களினதும் பாதுகாப்புக்கு எமது படையனி உதவியாக அமையும் எனவும், அவசர மற்றும் அபாய நிலையில் உதவி தேவைப்படுமிடத்து மேலதிக படையினர் களமிறக்கப்படுவர் எனவும் அல் துர்கி தெரிவிக்கிறார்.
Leave a comment