அங்காரா: குடியேறிகளை ஏற்றி வந்த டிங்கி இரப்பர் படகு ஒன்று இன்னுமொரு படகுடன் மோதியதில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக துருக்கிய கரையோரப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளது.கிரேக்க தீவான லெஸ்பொஸை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட அந்தப் படகு துருக்கியின் கரைக்கு அப்பால் கனாக்கேல் துறைமுகத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
படகு விபத்துக்குள்ளான வேளை அதில் 46 பேர் இருந்ததாகவும் அதில் 20 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 13 பேர் இன்னமும் காணாமல்ப் போயுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள டொகான் செய்தி நிறுவனம், பலியான 13 பேரில் நால்வர் சிறுவர்கள் என குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்வது தொடர்கிறது.
குரோஷியா மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகள் தமது எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியுள்ள நிலையில் ஸ்லோவேனிய எல்லைகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதுடன் நீண்ட வாகன நெரிசல்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment