Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “இளம்பிராயத்திலேயே நல்ல பக்டீரியாக்களுக்கு நாம் பழகிக்கொண்டால் ஆஸ்த்மா நோயை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிட முடியும்”

    லண்டன்: இளம்பிராயத்திலேயே நல்ல பக்டீரியாக்களுக்கு நாம் பழகிக்கொண்டால் ஆஸ்த்மா நோயை ஆரம்ப கட்டத்திலேயே வளராமல் தடுத்துவிட முடியும் என்கின்றனர் கனடாவைச்சேர்ந்த விஞ்ஞானிகள். மனித உடலையே தம் வாழ்விடமாகக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளை ஆராய்ச்சி செய்துள்ள இவர்கள் Science Translational Medicine என்ற மருத்துவ இதழில் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

  • மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்று கூடல்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு நடைமுறைப்படுத்தி வரும் மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான இரண்டாவது ஒன்று கூடல் இம்மாதம் 03 மற்றும் 04ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் நடைபெற்றது.

  • வீதி விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனம் மற்றும் சர்வோதய நிறுவனம் இணைந்து நடாத்தும் சமூக மட்ட சிறுவர் விபத்துக்களைக் குறைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அண்மையில் வீதி வபத்தில் பாதிக்கப்பட்ட மயிலம்பாவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஈடு செய்யும் வகையில் ரூபா 10,000 வழங்கப்பட்டது.

  • மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம்

    இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் இன்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

  • ஆப்கான் அணி பயிற்சியாளராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம்

    லாஹூர்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் வரவிருக்கும் சிம்பாப்வே தொடருக்கு மட்டும் இன்ஸமாம் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஆப்கான் கிரிக்கெட் சபை தலைமைச் செயலதிகாரி ‘பீக் ஸ்டானிக் சாய் தெரிவிக்கும் போது, “இன்ஸமாம் ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்” என்று கூறினார்.

  • தென்கிழக்கு பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக 13 மாணவர்கள் கைது

    ஒலுவில்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக உடமைகளுக்கு சேதம்விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  • தரம் 5 பெறுபேறு: அதிகூடிய புள்ளிகள் 196

    கொழும்பு: இன்று (07) வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளனி அடிப்படையில் மாவனல்லை, ஶ்ரீ சுமங்கள கனிஷ்ட வித்தியாலய மாணவி லக்‌ஷானி மேலனி 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

  • காத்தான்குடிப் பொலிசாரின் கஞ்சாக் கதை வழக்கிலிருந்து புவி. றஹ்மதுழ்ழாஹ் விடுதலை!

    நமது செய்தியாளர் காத்தான்குடி: காத்தான்குடியைத் தளமாகக் கொண்டு வெளியிடப்பட்டுவரும் ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டில் தேடுதல் நடாத்தி கஞ்சாப் பொதியொன்றைக் கைப்பற்றியதாக காத்தான்குடிப் பொலிசாரால் சோடிக்கப்பட்டுத் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் இன்று (06.10.2015) புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை விடுதலை செய்தார்.

  • விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பாக சிங்கபூர் உயர் ஸ்தானிகருடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் பேச்சுவார்த்தை

    ஹாசிப் யாஸீன் கொழும்பு: இலங்கைக்கான சிங்கபூர் உயர்தானிகர் எஸ்.சந்தரதாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு இன்று (06) மாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் ஹக்கீமின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

  • கொலைக் குற்றச்சாட்டு; ஜனக பண்டார எம்.பி கைது

    கொழும்பு: ஐ.ம.சு.மு. மாத்தளை மாவட்ட எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோன் சற்று முன்னர் (06) சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • போலந்து பிரதிநிதி, அமைச்சர் றிஷாத் சந்திப்பு

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் இன்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் தற்பொது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அத்துடன் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் இதன் போது பிரதி வெளியுறவு அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து கேட்டறிந்து கொண்டார்.

  • பலாங்கொட நகர சபைக்கு சர்வதேச விருது

    லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார் பலாங்கொட: ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தில் ஆசிய பசுபிக் நகர நிர்மாண திட்டம் 2015 போட்டியில் ஜூரியின் விஷேட விருது பலாங்கொட நகர சபைக்கு கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பல நாடுகளில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஜூரிஸ் விஷேட விருதுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது.

←Previous Page
1 … 310 311 312 313 314 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar