- ஹாசிப் யாஸீன்
கொழும்பு: இலங்கைக்கான சிங்கபூர் உயர்தானிகர் எஸ்.சந்தரதாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு இன்று (06) மாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் ஹக்கீமின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் விiளாயாட்டுத்துறை அபிவிருத்தி, குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு மைதானங்களின் நிலவரம், வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சர் ஹரீஸ் தூதுக் குழுவினருக்கு விபரித்ததுடன் இதனை நிவர்த்தி செய்ய தங்களது நாட்டின் உதவியினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.
மேலும் வீரர்களுக்கு விளையாட்டின் நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள், திறன்களை அபிவிருத்தி செய்தல் பற்றியும் ஆராயப்பட்டன. அத்துடன் 35 ஆயிரம் பார்வையாளர் கொண்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைப்பது சம்பந்தமாக இதன்போது இணக்கம் எட்டப்பட்டது.
எதிர்காலத்தில் இவ்விடயம் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடல் ஒன்றினை விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினருடன் இருதரப்பினரும் மேற்கொள்வது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இசசந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸூம் கலந்து கொண்டார்.