Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • 3வது நாளாக தொடரும் மட்டு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 3வது நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 07 வெள்ளிக்கிழமையும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகாமையில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் -மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு

    பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தனது தஃவத் -இஸ்லாமிய பணிகளின் ஒரு அங்கமாக பள்ளிவாயல் (மஸ்ஜித்) நிர்வாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்றினை 10-10-2015 நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை காத்தான்குடி-03 முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல் மேல் மாடியில் நடாத்தவுள்ளது.

  • ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது

    மட்டக்களப்பு: தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக 10 ஆண்டுகள் கழித்து டி.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுளனர். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

  • மாரடைப்பை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்

    லண்டன்: ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு இந்த ரத்தப் பரிசோதனையை செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று ஸ்கொட்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  • மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுவர் தின நிகழ்வு காத்தான்குடியில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 08.10.2015 இன்று காத்தான்குடி ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.

  • மட்டு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சிறுவர் பிரிவு வைத்தியர்களான டாக்டர் திருமதி.விஜி திருக்குமார்,திருமதி.அஞ்சலா அருட்பிரகாசம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலக சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களான திருமதி. கிரேஸ் நவரெத்தினராஜா, திருமதி .கலாரஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • “ஆஸ்த்மா மருந்து குழந்தைகளின் உயரத்தைக் குறைக்கும்”

    லண்டன்: ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்ட குழந்கைளில் இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆஸ்த்மா மருந்து கொடுக்கப்பட்டால், அந்த மருந்து அவர்கள் வளர்ந்து பெரியவராகும்போது அவர்களின் உடல் உயரத்தை குறைக்கிறது என பூர்வாங்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

  • 2020ல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை

    கொழும்பு: 2020ல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை திகழ்வதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஸாப் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று(08) சந்தித்த போதே இக்கருத்தினை கூறியுள்ளார்.

  • காத்தமண்ணில் ஒரே ஆண்டில் ஏழு வைத்தியர்கள் உதயம் – SYMO அமைப்பின் வாழ்த்துச்செய்தி

    காத்தான்குடி: நேற்றைய தினம் வெளியாகிய கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைக்கான இறுதி பரீட்சையின் முடிவுகளின் படி எமது காத்தன்குடியை சேர்ந்த ஏழு மாணவர்களும் தமது இறுதி பரீட்சையில் பூரண சித்தி அடைந்துள்ளதுடன் , தமது மருத்துவ கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்…

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆராய்வு

    NFGG கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடுத்த கட்ட நகர்வுகள், மூல உபாயங்கள் தொடர்பான செயலமர்வு ஒன்று கடந்த 03,04.10.2015 ஆகிய இரு தினங்களில் கொழும்பில் இடம்பெற்றது.

  • தமிழ் 193 புள்ளிகள்: மட்டு வின்சென்ட் மாணவி முதலிடம்

    கொழும்பு: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதன்படி தமிழ் மொழி மூலம் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவியான பத்மநாதன் தக்ஷினியா 193 புள்ளிகளை பெற்று முதலிடத்திலுள்ளார்.

  • தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் – மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் – அஹமட் முஷர்ரப் மாவட்ட மாவட்டத்தில் 3வது இடம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நேற்று 07 புதன்கிழமை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் 189 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார்.

←Previous Page
1 … 309 310 311 312 313 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar