மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம்

  • இர்ஷாட் ரஹ்மதுல்லா

rishadகொழும்பு: கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் இன்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க் அண்டனும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

rishad

இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்பல் ரெவல் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

rishad1

Published by

Leave a comment