தென்கிழக்கு பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக 13 மாணவர்கள் கைது

Oluvil uni studentஒலுவில்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக உடமைகளுக்கு சேதம்விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை 20ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க அக்கரைப் பற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மாணவர்களை விடுதலைசெய்யக் கோரி இன்று பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகம் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Oluvil uni student

கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக மாணவர்கள் தங்களுக்கு வளாகத்திற்குள்ளே விடுதி வசதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் செய்த புகாரையடுத்து இம் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Published by

Leave a comment