கொழும்பு: ஐ.ம.சு.மு. மாத்தளை மாவட்ட எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோன் சற்று முன்னர் (06) சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வேளையில் அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு, தற்போது அவர் பொலிஸாரின் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a comment