Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்காத முன்னாள் எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை

    கொழும்பு: உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்காத முன்னாள் எம்.பிக்களுக்கு எதிராக பொது நிர்வாக, முகாமைத்துவ அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 25 பேர் இன்னும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை கையளிக்கவில்லை என அமைச்சின் செயலாளர் ஜே. தலகே தெரிவித்தார்.

  • கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோ கொப்பி இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு

    ஏ.எல். டீன்பைரூஸ் கல்குடா: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோ கொப்பி இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு பிறைந்துறைச்சேனை மற்றும் மீராவேடையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டார்.

  • முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாணசபை பங்கெடுக்க வேண்டும்

    கொழும்பு: வடக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதிலும், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடலில் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கின்றது.

  • “நிலக்கீழ் மாளிகையில் யுத்த சமயத்தின்போது, தேசிய பாதுகாப்பு சபையினர் ஒருபோதும் கூடியதில்லை”- சரத் பொன்சேகா

    கொழும்பு: ஜனாதிபதி மாளிகையில் கட்டப்பட்டுள்ள 04 மாடி நிலக்கீழ் மாளிகையில், யுத்த சமயத்தின்போது, தேசிய பாதுகாப்பு சபையினர் ஒருபோதும் கூடியதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். குறித்த நிலக்கீழ் மாளிகையில், யுத்த காலத்தின்போது, பாதுகாப்பு சபையின் கூட்டங்கள் நடைபெற்றதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்திருந்தார்.

  • இலங்கையில் நாளொன்றுக்கு சராசரி 650 கருக்கலைப்பு

    கொழும்பு: இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு கூறியுள்ளது. அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

  • மூன்று முறை உலகக் கிண்ணத்தை வெற்றியீட்டிய ஒரே அணியாக நியுசிலாந்து சாதனை

    – MJ லண்டன்: சற்று முன்னர் லண்டன், டிவிக்னம் ரக்பி விளையாட்டரங்கில் நிறைவடைந்த ரக்பி உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 34:17 எனும் கோல் அடிப்படையில் நியுஸிலாந்து வெற்றிபெற்றதன் மூலம் 3 தடவை உலகக் கிண்ணத்தை வெற்றிபெரும் ஒரே அணியாக நியுசிலாந்து சாதனை படைத்திருக்கின்றது.

  • “அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் உறுதி”-ஹக்கீம்

    சப்னி அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை மண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை தலைமை ஒருபோதும் மீறாது என்றும் அட்டாளைச்சேனைக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவி அம்மண்ணுக்கு வழங்கப்படும். எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (31) தெரிவித்தார்.

  • உலகக்கிண்ண ரக்பி இறுதிப்போட்டி லண்டனில் தற்பொழுது இடம்பெறுகிறது

    இடைவேளை: நியுஸிலாந்து 16: 3 அவுஸ்திரேலியா – MJ லண்டன்: அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் ரக்பி உலகக்கிண்ண 2015 இறுதிப்போட்டி தற்பொழுது லண்டன், டிவிக்கினம் ரக்பி அரங்கில் அதிரடியாக இடம்பெற்று வருகின்றது. போட்டி ஆரம்பமாகி தற்போதுவரை இருதரப்பும் அதி மும்முரமாக ஆடிவருகின்ற நிலையில் 16-3 என்ற புள்ளி அடிப்படையில் இடைவேளைக்கு முன்னர் சமநிலையில் இரு அணிகளும் காணப்படுகின்றன.

  • ரஷ்ய விமானம் விபத்து : 224 பேர் பலி

    சினாய்: ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அதில் எவரும் உயிர் தப்பவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.சினாய் வளைகுடா பகுதியில் மீட்புக் குழுக்கள் விமான சிதிலங்களை கண்டுள்ளன. செங்கடல் கடற்கரை சுற்றுலா நகரான ஷரம் எல் ஷெய்க்கில் இருந்து அந்த விமானம் செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்குக்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது.

  • ரஷ்ய விமானத்தை காணவில்லை

    கெய்ரோ: எகிப்து ஷாம் எல்ஷேக் விமான நிலையத்திலிருந்து 200ற்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் சின்னை வான் பரப்பில் காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • காத்தான்குடியில் மலசல கூட குழியில் விழுந்து 3வயது சிறுமி மரணம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3வயது 2 மாத சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து மரணமாகியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

  • இஸ்ரேலியக் கண்ணீர் புகைக் குண்டில் எட்டு மாதக் குழந்தை மரணம்

    ஜெருஸலம்: இஸ்ரேலியப் படைகளுக்கும், கல்லெறிதலில் ஈடுபட்ட பலஸ்தீன இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதலில், இஸ்ரேலியப் படையினர் வீசிய கண்ணீர் புகை குண்டால் எழுந்த வாயுவை சுவாசித்த எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

←Previous Page
1 … 295 296 297 298 299 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar