உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்காத முன்னாள் எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை

parliament[1]கொழும்பு: உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்காத முன்னாள் எம்.பிக்களுக்கு எதிராக பொது நிர்வாக, முகாமைத்துவ அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 25 பேர் இன்னும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை கையளிக்கவில்லை என அமைச்சின் செயலாளர் ஜே. தலகே தெரிவித்தார்.

“இவர்கள் தொடர்ந்தும் இவ்வீடுகளில் தங்கியிருப்பார்களானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வெளியேறுமாறு கேட்டும் இன்னும் ஒன்றும் நடக்கவில்லை. இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களும் அடங்குவர். சிலர் டிசம்பர் வரை அவகாசம் கேட்கிறார்கள். நாம் மறுத்துள்ளோம்.

கொழும்பின் கேந்திரமாக இருக்கின்ற கொழும்பு 05 கொப்பித்திபொல மாவத்த, லோடஸ் வீதிகளிலேயே இந்த நவீன வீடுகள் அமைந்துள்ளன” என அவர் கூறினார். புதிய எம்.பிக்களுக்கு வீடுகள் கொடுக்க முடியாமல் இருக்கிறது. புதிய எம்.பிக்கள் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் சிறப்புரிமை இருக்கிறது எனத் தெரிவித்த அவர், தோல்வி கண்ட எம்.பிக்கள் வெளியேறியவுடன் திருத்த வேலைகள் செய்து புதிதாகத் தளபாடங்கள் போட வேண்டியுள்ளது. எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Published by

Leave a comment