ரஷ்ய விமானம் விபத்து : 224 பேர் பலி

plane crashசினாய்: ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அதில் எவரும் உயிர் தப்பவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.சினாய் வளைகுடா பகுதியில் மீட்புக் குழுக்கள் விமான சிதிலங்களை கண்டுள்ளன. செங்கடல் கடற்கரை சுற்றுலா நகரான ஷரம் எல் ஷெய்க்கில் இருந்து அந்த விமானம் செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்குக்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது.

பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஆவர்.

plane crash
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

ரஷ்ய விமான நிறுவனமான கொகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த ஏ 321 ரக விமானம். பயணிகளின் உறவினர்களுக்கு உதவுவதற்காக செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்கில் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Published by

Leave a comment