Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறார் இம்ரான் கான்

    லாஹூர்: பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள். அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டனர். இம்ரானின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கங்களில் அவரது கட்சியின் பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

  • யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

    யாழ்ப்பாணம்: வடமாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைகையில், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள், அந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், தங்களுக்கு நியாயம் வழங்குவதற்கு ஆணைக்குழு நியமிக்க வேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.

  • “வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை 2 வருடங்களுக்குள் நிறைவேற்றித்தாருங்கள்”

    அமைச்சர் றிசாத் அரசாங்கத்திடம் வேண்டுகோள் இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை 2 வருடங்களுக்குள் நிறைவேற்றித்தாருங்கள் என கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

  • மகிந்த-கப்ரால்: 40 மெற்றிக்தொன் தங்கத்தை ரகசியமான முறையில் ஜப்பான் நிறுவனத்திற்கு விற்ற ஆசாமிகள்!

    கொழும்பு: இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் சந்தேகத்திற்கிடமான இடைத்தரகர்கள் ஊடாக 40 மெற்றிக்தொன் தங்கம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கு இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  • இலஞ்சம் பெற்ற சுங்க அதிகாரிகள்: விளக்கமறியல் நீடிப்பு

    கொழும்பு: கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகளை எதிர்வரும் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார். ரூபா 125 மில்லியனை இலஞ்சமாக பெறும் போதே குறித்த சந்தேகநபர்களான சுங்க அதிகாரிகள் மூவுரம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • தங்களது கோரிக்கையை அமைச்சிடம் முன்வைக்கவே நாங்கள் வந்தோம், ஆனால் காவல்துறையே எங்கள் மீது தாக்குதல் நடத்தியது

    இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறுவதைவிட கடத்திச் செல்லப்பட்டார்கள் என்றுக் கூறுவதே சரியான வார்த்தை கொழும்பு: உயர் கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 39 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியைக் கற்கும் இந்த மாணவர்கள், தமது பாடநெறியை கணக்கியல் பட்டதாரி பாடத்திற்கு சமமாக ஏற்றுக்கொள்ளும்படி கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

  • மதுபான குற்றச்சாட்டு: சவுதி சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் பிரஜை ஒரு வாரத்தில் விடுதலை

    றியாத்: மதுபானம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்யப்படுவார் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார். கார்ல் அந்த்ரீ என்ற 74 வயதான இந்த பிரிட்டிஷ் பிரஜை, வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து, சவுதி அரேபிய மத காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

  • மஹிந்த, கோட்டா, முப்படையினருக்கு தண்டனை கிடையாது

    கொழும்பு: ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • மண்ணும் மனிதனும்..

    எத்தனை முறை கூட்டினாலும் திரும்பத் திரும்ப வந்து சேரும் மண்.. செருப்புக் காந்தத்தில் ஒட்டி படிக்கட்டின் கால் தட்டியில் கண்ணயரும் மண்..

  • “தேசியப்பட்டியல் வழங்குவதில் நியாயம் வேண்டும்”

    மர்சூக் அஹமட்லெப்பை காத்தான்குடி: சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இரண்டு தேசியபட்டியலில் ஒன்றை காத்தான்குடிக்கு வழங்க வேண்டும். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட இடம் காத்தான்குடி. முஸ்லிம் காங்கிரஸ்ஸை உருவாக்கியது மாத்திரம் அல்ல அதன் ஆரம்ப வளர்ச்சிக்கும் மிகவும் பங்களிப்பை காத்தான்குடி செய்துள்ளது. 1989ம் ஆண்டு முதன் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் பங்கு பற்றிய பாராளுமன்ற தேர்தலிலே அதற்கு கிடைத்த மூன்று ஆசனங்களிலே காத்தான்குடியும் ஒன்று. இந்த மூன்று ஆசனங்களுக்கும் மேலதிகமாக தேசிய பட்டியல்…

  • சிறுபான்மை பிரதி நிதித்துவங்களை குறிவைக்கும் புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை

    மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: விகிதாசார மற்றும் வட்டார தேர்தல் முறையின் கீழ் 2016 மார்ச் மாதம் இடம் பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தகள் சிறுபான்மை சமூக பிரதிநிதித்துவங்களில் எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

  • வீதி போக்குவரத்துக்கு இடையூரு செய்யும் குப்பைகள் மற்றும் யானைகளின் அட்டகாசம்

    MT. ஹைதர் அலி வாகரை: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மியான்குள வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகள் காரனமாக வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது.

←Previous Page
1 … 296 297 298 299 300 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar