கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோ கொப்பி இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு

  • ஏ.எல். டீன்பைரூஸ்

SHIBLY1கல்குடா: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோ கொப்பி இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு பிறைந்துறைச்சேனை மற்றும் மீராவேடையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டார்.

மார்க்க கல்வி அறிவு சிறந்த முறையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனைக் கொண்டு ஒவ்வொருவரும் தனக்கும் தமது சமூகத்திற்கும், பிரதேசத்திற்கும் சிறந்ததோர் பங்களிப்பினை வழங்கி சமூகத்தினை தீய விடயங்களிலிருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

SHIBLY

கல்குடா பிரதேசத்தில் பிறைந்துறைச்சேனையில் இயங்கிவரும் றவ்லதுல் அத்பால் லிதாலிமில் குர்ஆன் மதரஸா மற்றும் மீராவேடை உம்முல் ஹைர் முஸ்லிம் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய இரு மதரஸாக்களும் அபிவிருத்தி அடைய வேண்டும் அதன் மூலம் தங்களுடைய மார்க்க கல்வியினையும் கடமைகளையும் சிறந்த முறையில் செவ்வனே செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் நிதி ஒதுக்கீட்டில் இருந்து இரண்டு மதரஸாக்களுக்கும் தலா 120,000.00 ரூபாய் பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரங்கள் (01.11.2015) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

SHIBLY1

SHIBLY2

Published by

Leave a comment