Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இதுவரை கண்டிராத அதிசய மீன் ஒன்று வாகரையில்!

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி கடலில் இருந்து அதிசய மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இந்த மீன் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. 6 கிலோ 500 கிராம் நிறையுடைய இந்த அதிசய மீனை தாங்கள் இதுவரையில் கண்டதில்லை என்று மீனவர்கள் தெரி விக்கின்றனர். இந்த மீன் நீள் சதுரமானதும் வால்கள் அற்றதுமாக காணப்படுகின்றது.

  • இன்று பாலமுனையில் இடம்பெற்ற மாபெரும் இஜ்திமா நிகழ்வு!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தொனிப்பொருளில்  ஆண்கள்,பெண்களுக்கான இஜ்திமா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் இடம்பெறற்றது.

  • பொதுபலசேனாவின் கூட்டத்திற்கு ஹக்கீம் மறைமுக உதவி?

    கல்முனை: பொதுபலசேனாவுக்கு எதிராக கல்முனையில் ஒரு கண்டனக் கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்ய வக்கில்லாத மாகாண சபை உறுப்பினர் ஜமீலுக்கு, பொதுபல சேனாவின் கல்முனை கூட்டம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

  • இலங்கையில் பர்தா அணிவதற்கு எந்தவித தடையும் இல்லை!

    கொழும்பு: பர்தா அணிவதற்கு நாட்டில் எந்த வித தடையும் இல்லை என்றும் இலங்கையில் என்றும் இலங்கையில் முஸ்லிம் பர்தா அணிவதற்கு தடை என வெளிநாடுகளில் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என்றும்  ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • ‘உலகின் முன்னணி இணையதளங்களூடாக அமெரிக்கா உளவு பார்க்கிறது’

    நியுயோர்க்: அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சேர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன.

  • பிரான்ஸ் நாட்டுத் தூதுவர், சாய்ந்தமரு​து இளைஞர் கழக பிரதிநிதிக​ள் சந்திப்பு

    – றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிச்சனுக்கும் சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிசான் தலைமையிலான இளைஞர் கழக பிரதிநிதிகளுக்குமிடையேயான கலந்துரையாடல் நேற்று சாய்ந்தமருது இளைஞர் நிலையத்தில் நடைபெற்றது.

  • இலங்கையில் முதற் தடவையாக உலமாக்களுக்கான பல்கலைக்கழக கல்லூரி காத்தான்குடியில்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் முதற் தடவையாக அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளியான உலமாக்களுக்கான பல்கலைக்கழக கல்லூரியொன்று மலிக் அப்துல்லாஹ் பல்கழைக்கழக கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • கிண்ணியா கடல்பகுதியில் காணப்படும் முதலையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது யார்?

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் முதலையொன்று காணப்படுவதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் அப்பகுதியால் பிரயாணம் செய்த மக்களும் தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் அவற்றை பார்வையிடுவதற்காக கூட்டம் கூட்டமாக வருகை தருவதை காணக்கூடியதாகவுள்ளது.

  • கிண்ணியா நகரசபையில் பிரியாவிடை வைபவம்

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற முன்னால் நகரசபை ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவமும் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும் நேற்று மாலை நகரசபை கேட்போர் கூடத்தில் நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்றது.

  • வைன்யார்ட் கிராமத்திற்கு விஜயம்

    –  சீனாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கையில் மேற்கொள்ளப்படும் மரமுந்திரிகை செய்கையினை நவீன முறையில் மேற்கொள்ள சீனா அரசாங்கமும், தனியார் துறையினரும் உதவ முன்வந்துள்ளதாக பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்தார். னாவுக்கான  உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள பிரதமர் தலைமையிலான இலங்கையின் பிரதி நிதிகள் கொண்ட குழுவினர் இன்று

  • இலங்கை வர்த்தக மையத்தை கொண்ட ஒரு நாடாக மாறி வருகின்றது: அநுர சிறிவர்தன

    சீனாவின் குண்மிங்கிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா குண்மிங்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள சமாதானம், அதனுடன் கூடிய அபிவிருத்தி பணிகளை பார்வையிட வருமாறு தெற்காசிய நாடுகளின் வர்த்தக சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கையின் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன இலங்கையில் முதலீடு செய்வதற்கான துறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

  • ரஷ்ய ஜனாதிபதியும் அவரது மனைவியும் விவாகரத்து!

    மொஸ்கோ: 30 வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அவரது மனைவி லியுத்மிலாவும், நேற்று தங்களது விவாகரத்து பற்றி அறிவித்தனர். கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற பாலே நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தபின், இந்த அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டார். இது தாங்கள் இருவரும் இணைந்து எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார்.

←Previous Page
1 … 1,045 1,046 1,047 1,048 1,049 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar