சாய்ந்தமருது: பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிச்சனுக்கும் சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிசான் தலைமையிலான இளைஞர் கழக பிரதிநிதிகளுக்குமிடையேயான கலந்துரையாடல் நேற்று சாய்ந்தமருது இளைஞர் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யுத்தத்திற்கு பின்னர் இளைஞர்களின் செயற்பாடுகள், திறன்கள் அபிவிருத்தி, மொழி விருத்தி, இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள், எதிர்நோக்கும் சவால்கள், எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் பிரான்ஸ் நாட்டு தூதரக மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி திட்ட உத்தியோகத்தர் பென்சி கிரன்செப், சாய்ந்தமருது முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ.எம்.அன்வர், சாய்ந்தமருது இளைஞர் நிலைய பேதனாசிரியர் எம்.வீ.எம்.நௌஷாட், இளைஞர் கழகத் தலைவர் முஹம்மட் றிஸ்கான் உள்ளிட்ட இளைஞர் கழக பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரான்ஸ் தூதுவர் இளைஞர் கழக பிரதிநிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.




Leave a comment