கிண்ணியா: கிண்ணியா நகரசபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற முன்னால் நகரசபை ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவமும் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும் நேற்று மாலை நகரசபை கேட்போர் கூடத்தில் நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்றது.
கிண்ணியா நகரசபை ஊழியர் நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்த பிரியாவிடையும் பரிசளிப்பும் முன்னால் நகரசபையில் கடமை புரிந்து வேறு அரச நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற 6 உத்தியோகத்தர்கள் குறித்த நிகழ்வில் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.




Leave a comment