– சீனாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கையில் மேற்கொள்ளப்படும் மரமுந்திரிகை செய்கையினை நவீன முறையில் மேற்கொள்ள சீனா அரசாங்கமும், தனியார் துறையினரும் உதவ முன்வந்துள்ளதாக பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்தார். னாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள பிரதமர் தலைமையிலான இலங்கையின் பிரதி நிதிகள் கொண்ட குழுவினர் இன்று (2013.06.07) யூனான் பிராந்தியத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மைல் பிரதேசத்தின் வைன்யார்ட் கிராமத்திற்கு விஜயம் செய்து, அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் மரமுந்திரிகை செய்கை மற்றும் பழப்பாகு தொழிற்சாலை என்பனவற்றை பார்வையிட்டதன் பின்னர் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் தி.மு.ஜயரத்னவிடுத்த வேண்டுகோளினையடுத்து இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
நவீன தொழில் நுட்பங்களை கொண்டு பழப்பாகு செய்யப்படும் தொழிற்சாலையினையும் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இலங்கையில் தற்போது பல பகுதிகளில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும், அதனைது தரத்தை சிறந்ததாக மாற்றுவது தொடர்பிலான வழி முறைகள், மற்றும் பராமறிப்பு நடவடிக்கைகள் குறித்து இல்ஙகையின் மரமுந்திரகை செய்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பது முக்கியமாக கொண்டு இந்த விஜயம் அமைந்ததாக பிரதமர் தி.மு.ஜயரத்ன இங்கு கூறினார்.
சீனா இலங்கையின் விவசாய துறையின் மேம்பபாடுகளுக்காக மேலும் உதவிகளை வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்த பிரதமர், இதன் மூலம் இலங்கை விவசாயத்தில் புரட்சி கரமான மாற்றத்தை கொண்டுவரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.



Leave a comment