இலங்கை வர்த்தக மையத்தை கொண்ட ஒரு நாடாக மாறி வருகின்றது: அநுர சிறிவர்தன

சீனாவின் குண்மிங்கிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

P1100475குண்மிங்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள சமாதானம், அதனுடன் கூடிய அபிவிருத்தி பணிகளை பார்வையிட வருமாறு தெற்காசிய நாடுகளின் வர்த்தக சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கையின் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன இலங்கையில் முதலீடு செய்வதற்கான துறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

சீனாவின் யூனான் பிராந்தியத்தின் குண்மிங் பிரதேசத்தில் புதன்கிழமை ஆரம்பமான கண்காட்சியினையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சார்க் நாடுகளின் வர்த்தக சமூகத்தின் மாநாட்டின் அமர்வின் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

9 நாடுகளைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்ட இந்த மாநாடு தெற்காசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் காசி அக்ரம் உதின் அகமத் தலைமையில் இடம் பெற்றது.

மேலும் அமைச்சின் செயலாளர் அங்கு உரையாற்றுகையில் –

இலங்கையி்ன் பொருளாதார வளர்ச்சி வேகம் தற்போது அதிகரித்துவருகின்றது. கடந்த 30 வருடம் இலங்கை மக்கள் பெரும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுத்தனர். 2009 ஆம் ஆண்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரை இலங்கை பல்வேறு முன்னேற்றத்தை கண்டுவருகின்றது.

P1100475

இலங்கை வர்த்தக மையத்தை கொண்ட ஒரு நாடாக மாறி வருகின்றது.கறிப்பாக இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது அதனது சான்றாகும்.இதே போன்று இலங்கையின் கலாச்சாரம்இமற்றும் இன்னோரன்ன அமைப்புக்களும் இந்த அபிவிருத்தி காணரணங்களாகும் என்றும் செயலாளர் அநுர சிறிவர்தன கூறினார்.

பங்களாதேஷ் கைத்தொழில் அமைச்சர் திலிப் பருவா, யுனான் பிராந்திய ஆளுநர் லி ஜிய்ஹென்ங் உட்பட பலரும் உரையாற்றினர்.

இலங்கையிலிருந்து சென்ற துாதுக் குழுவினர் மற்றும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.அதே வேளை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் தலைவர் யூசுப், கே.மரைக்கார், மாலைதீவு வர்த்தக அமைச்சர் அஹமத்துடன் கலந்துரையாடுவதையும் படத்தில் காணலாம்.

P1100478

P1100480

Published by

Leave a comment