கிண்ணியா: கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் முதலையொன்று காணப்படுவதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் அப்பகுதியால் பிரயாணம் செய்த மக்களும் தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் அவற்றை பார்வையிடுவதற்காக கூட்டம் கூட்டமாக வருகை தருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இப்பகுதி மக்கள் குடியிருக்கும் நிலப்பகுதியோடு கடல் தொடர்புபட்டு காணப்படுவதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டுயுள்ளது. அத்தோடு இக்கடல் பகுதியில் இரவு நேரங்களில் அதிகமான மீனவர்கள் தொழிலில் ஈடுபடும் பகுதியாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சத்துடன் காணப்படுவதோடு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையும் தோன்றியுள்ளது.
![Matara-Croc-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/matara-croc-21.jpg?w=300&h=221)
குறிஞ்சாக்கேணி பாலத்தில் குளிப்பதற்கும் இறால் பிடிப்பதற்கும் செல்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் காணப்படும் முதலை சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருக்குமென முதலையை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இது தம்பலமாக குடா பகுதியில் இருந்து வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இதில் எத்தனை முதலை இருக்குமென சொல்ல முடியாதென மீனவர்கள் தெரிவித்ததோடு இக்கடல் பிரதேசத்தில் அதிகமாக கண்டல் தாவரங்கள் காணப்படுவதால் இரவு வேளைகளில் முதலை இக்கண்டல் தாவரங்களுக்குள் கரையொதுங்கி இருந்து பகல் நேரங்களில் நீருக்குள் செல்கின்றன.
அச்சத்துடனும் பயத்துடனும் இருக்கும் இப்பகுதி மக்களுக்கும் மீனவர்களுக்கும் சாதகமான நிலை ஏற்படும் பட்சத்தில்தான் அன்றாட தொழில் மற்றும் மக்கள் நடமாட்டமும் சுமுக நிலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் செயற்பாடுகளில் தங்கியுள்ளது. இந்த முதலையினை இடமாற்றுவதற்கான நடவடிக்கையினை மக்கள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் எடுக்குக வேண்டியது கட்டாய தேவையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Matara-Croc-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/matara-croc-21.jpg?w=150&h=110)
Leave a comment