Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • 70 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்

    டீன் பைரூஸ் – காத்தான்குடி: சுமார் எழுபது (70 இலட்சம்) ரூபா செலவில் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு  மூன்று மாடிகளைக் கொண்ட   கட்டிடம்  அமைப்பதற்காக வேண்டி அடிக்கல் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வினால் இன்று (28.06.2013 வெள்ளி) நடப்பட்டது.

  • ‘பாதியிலே கல்வியை கைவிடும் இலங்கை சிறார்கள்’

    லண்டன்: இலங்கை எழுத்தறிவு உள்ளவர்களின் வீதத்தில் மிகவும் உச்சத்தில் இருக்கின்ற போதிலும், அங்கு சில பகுதிகளில், இன்னமும் ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே கல்வியை பாதியில் கைவிடும் சிறார்கள் கணிசமாக இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

  • வாகனேரி பொத்தானை விவசாயிகளுக்கிடையில் கைகலப்பு; ஐவர் காயம்

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை பிரதேசத்தில் விவசாயிகளுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் ஐந்து விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்காக அப் பிரதேசத்திற்குப் பொறுப்பான வட்டவிதானையை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  • இலங்கைக்கும், மாலைத்தீவுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கும், மாலைத்தீவுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தின்தூதுவர் பேர்னார்ட் சவேஜ்,  நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில்  28 ஆம் திகதி இடம்பெற்றது.

  • ‘முஸ்லிம்களின் விரோதிகளான பொது பல சேனாவை காத்தான்குடிக்கு அழைத்து வருவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியிருப்பதானது காத்தான்குடியையும் பிரதேச மக்களையும் காட்டிக் கொடுக்கும் செயலாகும்’: என்.கே. றம்ழான்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொது பல சேனா என்ற முஸ்லிம்களின் விரோதிகளை காத்தான்குடிக்கு அழைத்து வந்து காத்தான்குடியையும் பிரதேச மக்களையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டிக் கொடுக்க முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.

  • பெண்களுக்கான இஸ்லாமிய மாநாடு

    காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு மற்றும் காத்தான்குடி தௌஹீத் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் ரமழானை வரவேற்போம் எனும் கருப்பொருளில் பெண்களுக்கான இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் 29.06.2013 சனிக்கிழமை அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 6.00 மணிவரை புதிய காத்தான்குடி-06, ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆபள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • கண்டி வைத்தியசாலையில் முஸ்லிம் தாய்க்கு ஒரே சூலில் 5 குழந்தைகள்!

    கண்டி: பெண் ஒருவர் கண்டி பெரியாஸ்பத்திரியில் ஒரே சூலில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தைகளின் தாய், சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக, கண்டி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டி, மடவளை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பாத்திமா பாயிஸா, கண்டி பெரியாஸ்பத்திரியில் வைத்து இந்த 5 குழுந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

  • ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

    கொழும்பு: ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசன் அலி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தங்களை உள்ளடக்காத காரணத்திற்காக ஆளும் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளும் உத்தேசம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • மூன்று பேரின் மரபணுக்கள் கலந்து குழந்தை உருவாக்க பிரிட்டன் சம்மதம்

    லண்டன்: மூன்று பேரின் டிஎன்ஏ மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளை உருவாக்கக்கூடிய நவீன ஐவிஃஎப் தொழிநுட்பத்துக்கு, உலகின் முதல்நாடாக பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐவிஃஎப் என்பது பெண்ணின் கரு முட்டையையும் ஆணின் விந்தணுவையும் உடலுக்கு வெளியே கருக்கட்டச் செய்து பின்னர் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரச்செய்கின்ற தொழிநுட்பம்.

  • அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இளம் ஊடவியலாளர் றிப்தி அலி கௌரவிப்பு

     பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கிழக்கு மாகாணம் கல்முனை நகரை பிறப்பிடமாக கொண்ட இளம் ஊடவியலாளர் றிப்தி அலி, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் நவீன ஊடகம் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக றிப்தி அலி அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் சென்றிருந்தார்.

  • ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்னிலங்கை வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு வெலிகமை நகர சபை மண்டபத்தில் வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் வெலிகம அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கத் தலைவருமான எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ளது.

  • உம்ராவுக்கான விசா விநியோகம் ஜுலை 08 இல் நிறைவு: 4 மில்லியன் விசாக்கள் இவ்வாண்டில் விநியோகம்

    கொழும்பு: உம்ரா விசா விநியோகிக் கப்படும் கடைசி திகதி எதிர்வரும் ஜுலை 8 (சஹ்பான் 29) என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி சஹ்பான் இறுதி வரை உம்ரா விசாக்களை விநியோகிக்கும் படி அனைத்து சவூதி தூதர கங்களுக்கும் அறிவுறுத் தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒசாமா நுகாலி குறிப்பிட்டார்.

←Previous Page
1 … 1,028 1,029 1,030 1,031 1,032 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar