பழுலுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: கிழக்கு மாகாணம் கல்முனை நகரை பிறப்பிடமாக கொண்ட இளம் ஊடவியலாளர் றிப்தி அலி, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் நவீன ஊடகம் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக றிப்தி அலி அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் சென்றிருந்தார்.
இதன்போதே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இளம் ஊடவியலாளர் றிப்தி அலி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்த ஊடகவியலாளர் றிப்தி அலி, ஒக்லோமா பல்கலைக்கழகத்தில் ‘நவீன ஊடகம்’ தொடர்பில் மூன்று வாரங்கள் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டார். பின்னர் கலிபோர்னியா மற்றும் வொஷிங்டன் ஆகிய மாநிலங்களுக்கும் இவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த இளம் ஊடகவியலாளர் றிப்தி அலி பிரபல ஊடகங்களில் ஊடகவியலாளராக செயற்படுகின்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரான இவர் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment