வாகனேரி பொத்தானை விவசாயிகளுக்கிடையில் கைகலப்பு; ஐவர் காயம்

vaharaiமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை பிரதேசத்தில் விவசாயிகளுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் ஐந்து விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்காக அப் பிரதேசத்திற்குப் பொறுப்பான வட்டவிதானையை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொத்தானை கொழுவாமடு பகுதியில் தமிழ் – முஸ்லிம் விவசாயிகள் கூட்டாக இணைந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ் விவசாயிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற வேளாண்மைச் செய்கைக்கான நீர் விநியோக நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. இந் நீர் வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள கருத்து முறண்பாடுகள் காரணமாக இரு விவசாயக் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனேரி நீர்ப்பாசனக் குளத்திற்கு மாதுறுஓயா நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரை அந்த பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள ஒரு பகுதியினர் சட்டவிரோதமாக அணை கட்டி தடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடன் சுமார் 20 பேர் கொண்ட விவசாயிகள் குழுவொன்று அந்த தடையை அகற்றி விட்டு, உழவு இயந்திரத்தில் திரும்பும்போது களுவாமடு என்னுமிடத்தில் ஒரு குழுவினரால் வழி மறித்ததில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் மோதலாக மாறியதாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

இக் கைகலப்பினால் காயமடைந்த ஐந்து பேர், சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் விவசாயக் கண்டத்திற்குப் பொறுப்பான வட்டவிதானையை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். JC

 

Published by

Leave a comment