காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு மற்றும் காத்தான்குடி தௌஹீத் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும்
ரமழானை வரவேற்போம் எனும் கருப்பொருளில் பெண்களுக்கான இஸ்லாமிய மாநாடு
இன்ஷா அல்லாஹ் 29.06.2013 சனிக்கிழமை அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 6.00 மணிவரை புதிய காத்தான்குடி-06, ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆபள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிக் சென்றரின் உபதலைவர் அஷ்ஷெய்க் SMBM. அன்ஸார் (மதனி) BA. அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ,
‘நோன்பின் சட்டங்கள்’
எனும் தலைப்பில் காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அறபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் MCM. றிஸ்வான் (மதனி) அவர்களும்
‘ஸஹாபிய பெண்களின் வாழ்வில் றமழான்’
எனும் தலைப்பில் இலங்கை தௌஹீத் பிரச்சாரத்தில் மூத்த தாயிகளில் ஒருவரான அஷ்ஷெய்க் MS. அப்துல் வதூத் ஜிப்ரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.
எனவே நிகழ்வில் சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு:
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு மற்றும்
காத்தான்குடி தௌஹீத் கூட்டமைப்பு

Leave a comment