Category: Your Kattankudy
-
‘சர்வதேசத்துக்கு பொய்யுரைப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும்’ – ஹூனைஸ் பாருக்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா முல்லைத்தீவு: வடக்கில் இனவாதத்தின் மூலம் எதனையும் எவருக்கும் பெற்றுக் கொடுக்க முடியாது, முடியுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களு்க்கு ஒரு வீட்டின் கல்லையாவது பெற்றுக் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், சர்வதேசத்துக்கு பொய்யுரைப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் கூறினார்.
-
சாய்ந்தமருது விதாதா வள நிலைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2013
– றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவின் விதாதா வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட 3மாத, 6மாத கால கணணிப் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் MM. சாக்கீர் தலைமையில் இடம்பெற்றது.
-
சவூதியில் இலங்கையை சுற்றுலா மையமாக பிரபல்யப்படுத்த முயற்சி
றியாத்: சவூதி அரேபியாவில் இலங்கையை ஒரு சுற்றுல்லா மையமாக பிரபல்யப்படுத்தும் முயற்சியில் றியாத்திலுள்ள இலங்கை தூதரகம் ஈடுபட்டுள்ளது என இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஆண்டுதோறும் 19,500 சவூதி சுற்றுலா பயணிகள் இலங்கை வருகின்றனர். இதை மூன்று வருடத்தில் இரட்டிப்பாக்க இலங்கை திட்டமிட்டுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
-
இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர்- கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்-சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை நேற்று (11.09.2013) தூதரக அலுவலகத்தில் சந்தித்து கல்முனை அபிவிருத்தி உள்ளிட்ட முஸ்லிம்களின் தற்போதை நிலை தொடர்பில் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம்.
-
வழமைக்கு மாறாக ஒருதேங்காயில் அபூர்வமான முறையில் பத்து கன்றுகள் முளைத்த சம்பவம் பூநொச்சிமுனையில்..
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பூநொச்சிமுனை முஹைதின் ஜூம்மா பள்ளிவாயல் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சீனி முஹம்மது லேனில் வசிக்கும் எம்.ஐ.ஜெஸீமா பீவியின் வீட்டு தோட்டத்தில் நாட்டிய பல தேங்காயில் ஒருதேங்காயில் வழமைக்கு மாறாக மிகவும் அதிசயமான முறையில் பத்து கன்றுகள் முழைத்துள்ளது.
-
‘இந்த ஜனாதிபதியினையும், எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கின்றோம்…..’
– மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இந்த ஜனாதிபதியினையும், எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கின்றோம். துன்பத்தால்,அழிவால், கஷ்டத்தால், பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இம்மக்களை காப்பதற்கு என்ன திட்டம் இருக்கின்றது என தெரிவிக்க முடியுமா என கேள்விழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
-
தேர்தலில் வடக்கு மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையே வெற்றியளிக்கச் செய்வார்கள் – ஜனாதிபதி
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: விளையாட்டுப் போட்டிகளில் விண், ஸ்பேஸ் என்கின்ற ஒரு சூத்திரம் இருக்கின்றது. இம்முறை இந்த தேர்தலில் அந்த சூத்திரம் எமக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் இந்த தேர்தலில் வடக்கு மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை
-
நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வர்த்தக மற்றும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான பயனுள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஹக்கீம்
பழுலுல்லாஹ் பர்ஹான் டில்லி: இலங்கையில் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வர்த்தக மற்றும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான பயனுள்ள பேச்சுவார்த்தையொன்று இலங்கையின் நீதியமைச்சருக்கும், இந்திய வர்த்தகம் மற்றும் கைத்தொழில் மன்றத்தின்
-
புனித மக்கா செல்லும் ஹஜ்ஜாஜிகளுக்கு மெனிஞ்சைடிஸ் எனும் மூளைக் காய்ச்சல் தொற்று நோய் வராமல் தடுப்பதற்கு மெனிங்கோ கொக் வெக்ஸின் தடுப்பு ஊசி போடும் நிகழ்வு காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக முஸ்லிம்களின் முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்மாதம் சவூதி அரேபிய புனித மக்காவுக்கு செல்லும் ஒரு தொகுதி ஹஜ்ஜாஜிகளுக்கான மெனிங்கோ கொக் வெக்ஸின் தடுப்பு ஊசி போடும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்தி
-
காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது- ஸ்தம்மிதம் அடைந்த போக்குவரத்து சேவைகள் மீன்டும் வழமைக்கு திரும்பின
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள்; இன்று 11-09-2013 புதன்கிழமை காலை மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம்; முடிவுக்கு வந்ததாக காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.
-
‘புர்கா அவெஞ்சர்’: மலாலாவின் வாழ்க்கையைத் தழுவிய கார்டூனுக்கு பாகிஸ்தானில் அமோக ஆதரவு
– OiT இஸ்லாமாபாத்: பொதுவாக கார்ட்டூன்கள், குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதையும் தாண்டி அதன் மூலமும் பல சமூக மாற்றங்களுக்கு அடி கோள முடியும் என்பதற்கு உதாரணங்கள் பல. அந்த வகையில் சமீபத்தில் பாகிஸ்தானில் சுட்டீச்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட கார்ட்டூன் தொடரான ‘புர்கா அவெஞ்சர்’ ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் திரும்பி, விரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
-
முஸ்லீம் மாணவிகள் நீச்சல் பயிற்சி–ஜெர்மன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
பிராங்க்பர்ட்: மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. ஜெர்மன் நகரான பிராங்க்பர்ட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள், தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது.