Category: Your Kattankudy
-
மாற்றத்தை நோக்கியதான வரலாற்றுக்காக மக்கள் சேவையாற்றுபவர்களுக்கே அனைவரும் ஒன்றிணைந்த ஆதரவை வழங்க வேண்டும் – பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் சாவகச்சேரி: பனந்தொழிற்துறையை சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டுமானால் அது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே சாத்தியமாகுமென பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தில் பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மத்தியில் நேற்று (9) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
புதுடில்லியில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 52 ஆவது மாநாட்டில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் புதுடில்லி: 56 ஆண்டுகளுக்கு முன்னர் இதே புதுடில்லி நகரில் பர்மா, இந்தியா, இந்தோனேஷியா, ஈராக், சிரியா ஆகிய நாடுகளோடு இலங்கையும் சேர்ந்து ஆசிய சட்ட ஆலோசனை குழுவை நிறுவியது நினைவுக்கு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பொழுது ஆறு உறுப்பு நாடுகளோடு நிறுவப்பட்ட இவ்வமைப்பு ஆசியா, ஆபிரிக்கா ஆகிய உலகின் இருபெரும் கண்டங்களில் உள்ள 47 உறுப்பு நாடுகளுடன் சர்வதேச அரங்கில் சமாதானத்துக்கும்,
-
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவிதை போட்டி
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமக்கு கற்பித்த ஆசான்களை கௌரவிக்கும் நோக்கில் கவிதை போட்டியொன்றினை கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை ஏற்பாடு செய்துள்ளது.
-
பரஹாதெனிய பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மின்னல் பிரசாரம்
– றிஸ்கான் முகம்மட் பரஹாதெனிய: குருணாகல் மாவட்டத்தின் பரஹாதெனிய பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மின்னல் பிரசார மேடையில் தேசிய பணிப்பாளர் ஏ.சீ. யஹியகான் உரையாற்றுவதையும் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரபூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசனலி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம்,
-
பொலிஸாரும் பொதுமக்களுக்குமிடையில் வாக்குவாதம் சந்தேகநபர்கள் சரீரப்பினையில்
– அபூஸலாமா புல்மோட்டை: புல்மோட்டை பிரதேசத்தில் மீண்டும் பொது மக்களின் பரம்பரைக் காணிகளிற்குள்ளும், அனுமதிப்பத்திர மற்றும் உறுதிக் காணிகளுக்குள்ளும் நிலஅளவையாளர்கள் கடந்த 09.09.2013ஆம் திகதி நில அளவையிலீடுபட்டனர். இதனை அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து ஏன் காணிகள் அளவை செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கு
-
பலஸ்தீன நீதியமைச்சருடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தை
– றிஸ்கான் முகம்மட் புதுடில்லி: இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் பங்குபற்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், திங்கள் கிழமை (10) பலஸ்தீன நீதியமைச்சரான வழக்கறிஞர் அலிமொஹானாவுடன் சட்ட விவகாரங்கள் தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த பொழுது பிடிக்கப்பட்ட படம்.
-
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மாகாணங்கள் ரீதியாக விஸ்தரிக்கும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண அலுவலகமொன்று (10.09.2013)
-
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 52 ஆவது மாநாட்டில் ஹக்கீம்
– றிஸ்கான் முகம்மட் புதுடில்லி: இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 52 ஆவது மாநாட்டில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும்,அதில் கலந்துகொண்ட ஒமான் நாட்டு நீதியமைச்சர் அப்துல்லா சயீத் அல் சயீதியுடன் இரு நாடுகளினதும் நீதித்துறை தொடபான விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியைக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
– PMGG ஊடகப்பிரிவு மன்னார்: தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியைக் கூட்டமைப்பினருக்கும் இடையில் 2013.09.21ம் திகதியில் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை மாலை (09.09.2013) மன்னாரில் வைத்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
-
அபுதாபியில் காங்கேயனோடைப் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் மாரடைப்பினால் வபாத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் அபுதாபி: மாரடைப்பினால் இலங்கையை காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் டுபாய் அபுதாபியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மரணித்துள்ளார். சுமார் 05வருடங்களுக்கு தொழில் நிமித்தம் டுபாய் அபுதாபி நகருக்குச் சென்ற நெய்னா முஹம்மது நாஸர் (வயது 43) அண்மைக்காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
-
தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் கோயில் தாக்கட்டமை இனவாதிகளின் இழிசெயல்-கண்டனச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மன்னார்: தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் சிலையை தகர்த்தவர்களை கண்டுபிடிக்க முடியாதது அரசாங்கத்திற்குப் பெரிய அவமானம் என நீதியமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
-
தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில் தாக்கப்பட்டமைக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கண்டனம்
– PMGG ஊடகப்பிரிவு தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் தாக்கப்பட்டு அங்கிருந்த சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.