– இர்ஷாட் ரஹ்மதுல்லா
முல்லைத்தீவு: வடக்கில் இனவாதத்தின் மூலம் எதனையும் எவருக்கும் பெற்றுக் கொடுக்க முடியாது, முடியுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களு்க்கு ஒரு வீட்டின் கல்லையாவது பெற்றுக் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், சர்வதேசத்துக்கு பொய்யுரைப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியி்றுப்பு பிரதேசங்களில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முல்லை மாவட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் பேசுகையில் கூறியதாவது –
இன்று வன்னி மாவட்டம் பல்துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவருகின்றது.இதன் மூலம் மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவருகின்றனர்.இதனை தாங்கிக் கொள்ள முடியாதஇதமது கொள்கையினை மக்களுக்கு பலவந்தமாக திணி்க்க முடியாத நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றுள்ளது.
கடந்த 30 வருடம் எமது மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்த நன்மைகள் என்னஇஒரு கல்லைக் கூட வீடுகட்டுவதற்கு பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள்இஎமது கட்சி இந்த மக்களுக்கு வீடமைப்பு திட்டங்களை கொண்டுவருகின்ற போதுஇஅதற்கெதிராக விசமத்தனமான பிரசாரங்களில ஈடுபட்டுவருவதை நாம் காணுகின்றோம்.இதற்கு சில ஊடகங்களும் துணைபோயுள்ளன.
மக்களின் நிம்மதியான வாழ்வை சீர்குலைத்து, மீண்டும் ஒரு இருள்மிகுந்த காலத்தை எற்படுத்த முனையும் சக்திகளுக்கு தகுந்த பாடத்தை தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த தேர்தலில் வழங்குவார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார்.


Leave a comment