Category: Your Kattankudy
-
மேர்வின் சில்வாவின் மற்றுமொரு திருமண ஆசை!
குருணாகல்: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு திருமணம் செய்யும் அழைப்பை விடுத்து அதனை மறுத்த அமைச்சர் மேர்வின் சில்வா மற்றுமொரு திருமண யோசனையை முன்வைத்துள்ளார். பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் ஆளும் கட்சியின் அரசியல்வாதியுமான கீதா குமாரசிங்கவுக்கு அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.
-
கிளிநொச்சி – சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் சுன்னாகம்: கிளிநொச்சி – சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். சுன்னாகத்தில் அமைந்துள்ள உபமின் நிலையத்தில் மேற்படி நிகழ்வு இன்றைய தினம் (14) இடம்பெற்றது.
-
ஜூம்ஆ பேருரை- ஒலிப்பதிவு
– அகமட் ஆஸிர் இடம்: ஜாமியுழ்ழாபிரின் ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி உரை: அஷ்ஷெய்க் இர்ஷாத் (பலாஹி) தலைப்பு: அல்லாஹ்வின் பொருத்தம்
-
யாழ்தேவி ரயில்சேவை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலம் – போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: யாழ்தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 23 வருடங்களின் பின்னர் தொடக்கி வைத்துள்ளதன் மூலம் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலம் மீண்டும் மலர்ந்துள்ளது என போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
-
இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் ஈ.எச். அஸ்மி சனூர்டீனை – கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சந்தித்தார்
– பழுலுல்லாஹ் பர்ஹான், AGM. ஆசாத் கல்முனை: கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் ஈ.எச். அஸ்மி சனூர்டீனை நேற்று வெள்ளிக்கிழமை (13.09.2013) உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
-
யாழ்தேவி புகையிரத சேவை: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் பிரதம அதிதி
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மாங்குளம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்ககப்பட்டது. இன்று காலை மாங்குளத்திலிருந்து வைபவ ரீதியாக புகையிரதம் பயணிக்கும் நிகழவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாங்குளத்திலிருந்து -கிளிநொச்சிக்கான முதலாவது பதிவினை பதிவேட்டில் பொறித்தார்.
-
23 வருடங்களின் பின்னர் யாழ்தேவி புறப்பட்டது: ஜனாதிபதியும் பிரமுகர்களும் பயணித்தனர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: வவுனியா ஒமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான யாழ்.தேவி புகையிரத சேவையை 23 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி வவுனியா ஒமந்தை புனரமைக்கப்பட்ட ரயில்பாதையூடாக வடபகுதிக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார்.
-
மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் அதே மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும்போது விரண்டோடுகின்றனர்- ரிஷாட் பதியுத்தீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: விதவைகளையும், அங்கவீனர்களையும் உருவாக்கி அவர்களை அவலத்தில் ஆழ்த்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தமிழ் மக்கள் முன் வந்து இந்த அநியாயத்தை மீண்டும் புரிவதற்கு அனுமதி கோறுகின்றனர் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், இவ்வாறு மக்களது உணர்வுகளை அழிவுக்காக துாண்டும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
-
துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடம் திறந்து வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடம் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (13.09.2013) வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் இலட்சுமணன் தலைமையில் துறைநீலாவணை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உசுப்பேற்றும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பழுளுல்லாஹ் பர்ஹான் நல்லூர்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உசுப்பேற்றும் வகையிலான பொய்யான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டுமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
-
தேர்தல் பிரசாரங்கள் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு
கொழும்பு: தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பில் கட்சிகளினாலோ சுயேச்சைக் குழுக்களினாலோ வேட்பாளரினாலோ வெளியிடப்படும் எந்தவொரு பிரசாரங்களையும் முன்னெடுக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார்
ஓமந்தை: ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.