தேர்தல் பிரசாரங்கள் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

electionகொழும்பு: தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பில் கட்சிகளினாலோ சுயேச்சைக் குழுக்களினாலோ வேட்பாளரினாலோ வெளியிடப்படும் எந்தவொரு பிரசாரங்களையும் முன்னெடுக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி தேர்தல் பிரசாரங்கள், அரசியல் விளம்பரங்கள், அறிக்கைகளுக்கு, 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் பிரசுரிப்பதற்கும், ஒலி, ஒளி பரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment