துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடம் திறந்து வைப்பு

02[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு:  துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடம் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (13.09.2013) வெள்ளிக்கிழமை  பாடசாலை அதிபர் இலட்சுமணன் தலைமையில் துறைநீலாவணை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திசகாந்தன்,கௌரவ அதிதிகளாக கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளைநாயகம்,முன்னாள் கிழக்கு மாகானசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது பிரதம அதிதியாக  கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திசகாந்தன் புதிதாக அமைக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளில் மஹிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் மஹிந்தோதய ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

001[1]

04[1]

02[1]

Published by

Leave a comment