கண்டி: வத்துகாமம் பெருந்தோட்டப் பகுதியான கலாபொக்கை அபிராமி வித்தியாலயத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பகுதிகளில் வாக்களிப்பு மிக வேகமாக இடம்பெறுகிறது. குறிப்பாக அக்குறணை, உடுநுவர பிரதேசங்களில் 50 சதவீதத்தையும் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் பெருந்தோட்டப் பகுதியான கலாபொக்கை அபிராபி மகா வித்தியாலயத்தில் கண்டி மாவட்டஅரசியல் வாதியொருவர் தலைமையில் வந்த கூட்டம் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததாகவும் இதனால் மக்கள் பதறி ஓடியதாகவும் மத்திய மாகாண சபை வேட்பாளர் மதியுகராஜா தெரிவித்தார்.
அதேபோல் கம்பளை பிரதேசத்திலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
– வீரகேசரி
Leave a comment