லண்டன்: லண்டன் கிளப்பம் சந்தி ரயில் நிலையத்தில் சற்று முன்னர் இளைஞர் ஒருவர் ஓடிச் சென்ற ரயில் முன்னிலையில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அறிய முடிகிறது. குறித்த நபர் ஓர் இளைஞராக இருக்கக்கூடும் என நம்பப்படுவதுடன், உடல் அவசரமாக மருத்துவமைன்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றது.
குறித்த நபர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தற்கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என அறிய இரகசியக் கமெரா உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கிளப்பம் சந்தி லண்டன் நகரை ஊடறுத்துச் செல்லும் முக்கிய ரயில் சந்தி என்பதுடன் 17 பிளட்போர்ம்களை கொண்டமைந்த முக்கிய ரயில் நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![clapham-junction-platform[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/clapham-junction-platform1.jpg?w=150&h=57)

Leave a comment