தந்தையை இழந்த சிறுவர்களுக்கான நிதி வழங்கும் வைபவம்

19092013614பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஜம்இய்யதுஸ் ஸபாப் அனுசரனையுடன் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த 36 சிறுவர்களுக்கான பராமரிப்பு நிதி வழங்கும் நிகழ்வு காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் கடந்த (19.09.2013) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

தந்தை மரணித்து தாயின் அல்லது குடும்ப உறவினர்களின் பொறுப்பில் வளர்ந்து வரும் சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக இவ் உதவித்தொகை தொடராக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிதி வழங்கும் நிகழ்வில் ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மௌலவி எஸ்.எச். அறபாத் (ஸஹ்வி) காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் செயலாளர் எம்.மிஹ்ழார்,அதன் நிருவாகிகள் சிறுவர்களின் தாய்மார்கள் மற்றும் பொறுப்பாளர்களும் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment