Category: Your Kattankudy
-
நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயாவுக்கு நீதிமன்றம் ஆணை
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் எதிர்வரும் அக்டோபர் 30 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிகவுடர் இன்று வியாழன் உத்தரவிட்டுள்ளார்.
-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டு பணிமனை ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலச்சினையுடன் மட்டக்களப்பு மீடியா என்று பொறிக்கப்பட்ட ரீஸட் அன்பளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைய
-
றிசாத் பதியுதீனின் கம்பஹா மாவட்ட இணைப்பாளராக தொழிலதிபர் எம்.என்.சிராஸ் முஹம்மத் நியமனம்
இரசாத் ரஹ்மத்துல்லாஹ் கம்பஹா: கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் கம்பஹா மாவட்ட இணைப்பாளராக தொழிலதிபர் எம்.என்.சிராஸ் முஹம்மத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நியமனக கடிதத்தினை அமைச்சரிடம் இருந்து இன்று மாலை பெற்றுக் கொண்டார்.
-
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் ‘முன்னோக்கிய பாதை’ வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொண்டர் சேவைகள் – தலைவர் அப்துல்லாஹ்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை மட்டு காத்தான்குடிப் பிரதேசத்தில் பல்வேறு முன்னேற்றகரமான தொண்டர் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.
-
காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா ஏற்பாட்டில் துல்ஹஜ் மாத ஆரம்ப பத்துத் தின மார்க்க விளக்க வகுப்புக்கள்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இஸ்லாத்தில் துல்ஹஜ் மாத ஆரம்ப பத்து தினங்களின் முக்கியத்துவம் அதன் சிறப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அத்தினங்களை பயனுள்ள வகையில் கழிக்கும் நோக்கில் காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா ஏற்பாட்டில் அஷ்ஷபாப் சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி
-
காத்தான்குடி றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் தலையின்றி பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டி – அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து கொள்ளுங்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று அதில் ஒன்று தலையில்லாமல் பிறந்துள்ள அதிசய சம்பவமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கர்பலா விக்டரி மைதானத்திற்கு முன்பாகவுள்ள டீன் வீதி ஹைறாத் லேனில் அமைந்துள்ள ஏ.எம். றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் இன்று
-
உழ்ஹிய்யாவுக்கு பதிலாக எந்த மாற்று வழிகளும் கிடையாது – அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: உழ்ஹிய்யா கடமையை இந்நாட்டு முஸ்லிம்கள் பண்டுதொட்டு நிறைவேற்றி வருகின்றனர். என்ன இடையூறுகள் வந்தபோதிலும் அதனை நிறைவேற்றவே எந்தவொரு முஸ்லிமும் விரும்புவார். இந்நாட்டுக்கு இஸ்லாம் வந்து சேர்ந்தது முதல் நம்நாட்டு முஸ்லிம்கள் சன்மார்க்கக் கடமைகளை
-
முதலிடம் பெற்ற மாணவன் அமெரிக்கா செல்வார்!
கொழும்பு: புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற காலி மஹிந்த கல்லூரி மாணவன் சந்தரு தத்சர பலஹேவாவுக்கு அமெரிக்காவின் ‘டிஸ்னிலான்ட்’ கல்விச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்தார்.
-
ஈராக்கில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரம் கண்டுபிடிப்பு
பக்தாத்: வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் சட்டு காலா என்ற கிராமம் உள்ளது.
-
சிரியா-அமெரிக்கா போரைத் தடுத்து நிறுத்தயமைக்காக ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துறை!
– SHM மொஸ்கோ: சிரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் மூளாமல் தடுத்ததற்காக ரஷ்ய அதிபர் புதின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிரிய உள்நாட்டு போரில் அந்நாட்டின் அதிபர் பஷர் அல்-ஆசாத் அப்பாவி பொது மக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் சில அண்டை நாடுகள் குற்றம் சாட்டின.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன் நிறுவன அதிகாரிகள் பாலியல் தொல்லை தருவதாக புகார்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முற்படுவதாக உள்ளுர் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் ஓன்றியமான இணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.
-
30 வருட கால கொடூர யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலைக்கு காரணம் தமிழ் அரசியல் தலைமைகளே!-முன்னாள் கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கடந்த காலங்களில் நம் அப்பாவித் தமிழ் மக்கள் மரணித்ததிற்குப் பொறுப்பானவர்கள் கடந்த கால நம் தமிழ் அரசியல் தலைமைகள் விட்டதவறுதான் காரணம். இந்நிலமையினைப் போக்க ஏதிர் காலத்தில் நமது குழந்தைகளை மாற்றுச் சிந்தனையுள்ளவர்களாகவும், சிறந்த கல்வி மான்களாகவும் மாற்றுவதற்கு பெற்றார்கள் தமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் அதீத அக்கறை செலத்தி