மட்டக்களப்பு: கடந்த காலங்களில் நம் அப்பாவித் தமிழ் மக்கள் மரணித்ததிற்குப் பொறுப்பானவர்கள் கடந்த கால நம் தமிழ் அரசியல் தலைமைகள் விட்டதவறுதான் காரணம். இந்நிலமையினைப் போக்க ஏதிர் காலத்தில் நமது குழந்தைகளை மாற்றுச் சிந்தனையுள்ளவர்களாகவும், சிறந்த கல்வி மான்களாகவும் மாற்றுவதற்கு பெற்றார்கள் தமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் அதீத அக்கறை செலத்தி செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (02.10.2013) மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு கல்வி வலயம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் காணப் படுகின்றது. இந்தக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் உள்ள வளப்பற்றாக்குறை படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பாடசாலைகளிலுள்ள மின்சாரப் பிரச்சனை தற்போது குறைந்துள்ளது. இந்த வெல்லாவெளி பாடசாலைக்கு பாடசாலை அத்தபரினால் 1000 கதிரைகளும் பாடசாலைக்குரிய சுற்று மதிலும் அமைத்துத் தரும்படி எம்மிடம் கேட்டுள்ளார் இதனை நாம் நிட்சயமாக அடுத்த வருடம் பூர்த்தி செய்வோம்.
தற்போது உலகம் துரித கதியில் முன்னேறிக்கொண்டு செல்கின்றது. அதற்கிணற்க பெற்றோர்கள் தமது பிள்ளைகளை முறையாகக் கற்பிக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க அபிவிருத்திக்கும் உட்கட்டுமானங்களுக்கும் பணம் எங்கிருந்து வருகிற்றது என்பதனையும் மக்கள் அறிய வேண்டும் அபிவிருத்திக்குரிய நிதி வசதிகளை அரசிடம் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் அதை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்னற உறுப்பினர் ஒருவரிடம் கேட்டால் அவர் வெறும் 50 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் என்ன செய்வது அவர்களின் நிலமை அவ்வாறுதான் இதற்குத்தான் மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
எதிர் வருகின்ற 30 வருடங்களுக்கு பின்னர் எமது பிள்ளைகள் எவ்வாறு இருக்க வேண்டும் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை பெற்றார்கள் இப்போதிருந்தோ சிதித்து செயற்பட வேண்டும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்று முதல் முதலமைச்சராக நான் பதவியேற்க முன்பு எத்தனையோ பேர் என்னை ஆயுதக் குழுவின் தலைவர் என்றும் இன்னும் பலவாறாக விமர்சித்தார்கள் , ஊடகங்களும் என்னை விமர்சித்தன இவ்வாறுதான் நிலமை இருந்தது அப்போது நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் எடுத்த முயற்சியின் பலனாகத்தான் இப்போது இந்த பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபம் நிறைவு பெற்றிருக்கின்றது.
கடந்த காலங்களில் நம் அப்பாவித் தமிழ் மக்கள் இறந்துள்ளார்கள் இதற்கு கடந்த கால நம் தமிழ் அரசியல் தலைமைகள் விட்டதவறுதான் காரணம். இந்நிலமையினைப் போக்க ஏதிர் காலத்தில் எமது குழந்தைகளை மாற்றுச் சிந்தனையுள்ளவர்களாக மாற்றுவதற்கு சிறந்த கல்வி மான்களாக மாற்றுவதற்கு பெற்றார்கள் தமது குழந்தைகளின் கல்வி வளர்சியில் அதீத அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும். என அவர் தெரிவித்தார்.

Leave a comment