கொழும்பு: புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற காலி மஹிந்த கல்லூரி மாணவன் சந்தரு தத்சர பலஹேவாவுக்கு அமெரிக்காவின் ‘டிஸ்னிலான்ட்’ கல்விச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்தார்.
198 புள்ளிகள் பெற்ற மாணவன் சந்தரு பலஹேவாவை காலி மஹிந்த கல்லூரிக்குச் சென்று சந்தித்து வாழ்த்துத்தெரிவித்த அமைச்சர், பாடசாலை அதிபர், வகுப்பாசிரியை ஆகியோருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் தென் மாகாணம் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்றது குறித்து பெருமையடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். .
குறித்த மாணவனுக்கு 2 வாரங்கள் டிஸ்னிலாந்திற்கு சென்று வர சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
GA

Leave a comment