மட்டக்களப்பு: இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பணிமனையின் உதவிப் பணிப்பாளர் எம்.நைரூஸ் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இங்கு ஊடகவியலாளர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்வரும் மாதங்களில் மட்டு-இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்ட்டது.
இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்முஸ்லிம் அச்சு இலத்திரணியல் ஊடகவியலாளர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் தலைமையக அதிகாரிகள், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன் போது ஊடகவியலாளர்களினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை தலைமையக அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களும் அளிக்கப்பட்டதோடு இவ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலச்சினையுடன் மட்டக்களப்பு மீடியா என்று பொறிக்கப்பட்ட ரீஸட் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்ட்டது.

Leave a comment